Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓரினச்சேர்க்கை காதலியை திருமணம் செய்து கொண்ட ஜாக்கிசான் மகள்!

ஓரினச்சேர்க்கை காதலியை திருமணம் செய்து கொண்ட ஜாக்கிசான் மகள்!
, செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:00 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா நக்(19), தனது ஓரினச்சேர்க்கை காதலியை திருமணம் செய்துக்கொண்டதாக இணையம் மூலம் தெரிவித்துள்ளார்!
 ஜாக்கி சானின் 19 வயது மகள் எட்டா நக், தனது தன்பாலின சேர்க்கை காதலியை திருமணம் செய்துக்கொண்டதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
1990ம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்லெய்ன் நக். இவருக்கும் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக். தற்போது தனியா தன் தன்பாலின சேர்கை காதலி அட்டுனும் உடன் வசித்து வரும் எட்டா நக், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டாதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
webdunia
கனடா  நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் அட்டுன். திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத்தினை திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எட்டா நக் தனது ஓரினச்சேர்க்கையாளர் அட்டுனம்(வயது 31) குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முதன்முதலாக இணையத்தில் வெளியிட்டார். இந்த பதிவிற்கு பின்னரே எட்டா நக் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது உலகிற்கு தெரியவந்தது.
 
இந்நிலையில் தற்போது இவ்விருவரும் தங்களது திருமண செய்தியினை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.  தங்களது திருமண சான்றிதழினை வெளியிட்டுள்ள எட்டா நக், தங்களது திருமணம் கன்னடா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்தை அபகரித்து சோறு போடாத மகன்கள்: செருப்படி கொடுத்த மாவட்ட ஆட்சியர்