Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸின் கையில் சிக்காத எச்.ராஜா கூலாக பேட்டி

போலீஸின் கையில் சிக்காத எச்.ராஜா கூலாக பேட்டி
, சனி, 22 செப்டம்பர் 2018 (16:52 IST)
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது
உயர்நீதிமன்றத்தையும் போலீசாரையும் தரக்குறைவாக பேசினார்.



அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி தமிழகத்திலுள்ள மக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மத்தியில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை தணிவதற்குள், அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்பப் பெண்களை நாகரிகமற்ற முறையில் பேசிய எச். ராஜா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்த இரு விவகாரத்தில் பல காவல்நிலையங்களில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூரில் எச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
webdunia

”தமிழக கோயில்களில் உள்ள சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலும் அறநிலையத்துறை அதிகாரிகள் 82% கொள்ளையடித்துள்ளனர். இந்து சமுதாயத்தின் பாரம்பரிய உரிமைகள் அழிக்கப்பட்டு வருகின்றது.

இதுவரைக்கும் தமிழகத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் காணாமல் போய் இருக்கிறது. மேலும் தன்னை பிடிக்க தனிப்படை  அமைக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் தலைமறைவாக இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியரின் உதட்டைக் கடித்த தாய்லாந்து பெண் - காரணம் என்ன?