Publish Date: Wed, 20 Jun 2018 (17:17 IST)
Updated Date: Wed, 20 Jun 2018 (17:18 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், வடசென்னை படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 28ம் தேதி வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.