Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் முதலமைச்சர் ஆனால்... விஜய் அதிரடி பேச்சு

Advertiesment
நான் முதலமைச்சர் ஆனால்... விஜய் அதிரடி பேச்சு
, புதன், 3 அக்டோபர் 2018 (08:16 IST)

நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
 


இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது: ``சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு ஆஸ்கர் கிடைத்தது மாதிரி.. ஒருவிரல் புரட்சி பாடல் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எழுச்சி. யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. பழ.கருப்பையாவுடன் சேர்ந்து நடித்ததை கௌரவமாக நினைக்கிறேன். வெற்றிக்காக எவ்வளவு வேணாலும் உழைக்கலாம் . வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்காக மட்டும் அல்ல. இயற்கை தான்.

எல்லாம் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிறக போகிறாம்.

முதலமைச்சரானால் நீங்கள் மாற்ற வேண்டிய முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்று  கேட்கிறீர்கள், லஞ்சம், ஊழலை நான் ஒழிப்பேன். ஆனால் கற்பனையாக முதலமைச்சர் ஆனால் இதெல்லாம் நடக்கும் என எடுத்துக்கலாம் என்றார். மேலும் மேல்மட்டத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தர்மம் தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடி ஏற்படும் போது நல்லவர்கள் பொது வெளிக்கு வருவார்கள் என்று கூறினார்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு அல்வா, மல்லிகைப்பூ கொடுத்தவர்கள் கைது