லீனா மணிமேகலையிடம் 1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சுசி கணேசன் வழக்கு

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:31 IST)
பாலியல் புகார் கூறிய  இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக 1 ரூபாய் நஷ்டஈடு கேட்டு இயக்குனர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘‘மி டூ’’ ஹேஷ்டேக்  மூலம் நடிகைகள், பாடகிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து  டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக டிவிட்டரில் இயக்குநர் லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார், இதனால் அதிர்ச்சி அடைந்த சுசி கணேசன்,  தன் மீது பொய்யான புகார் தெரிவித்ததாக ஏற்கனவே லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி பொய்யான  குற்றச்சாட்டை இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்ததாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் 1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இயக்குனர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்