சென்னையில் விடிய விடிய மழை: அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (06:41 IST)
சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தற்போது வரை நல்ல மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாகனங்கள் சாலையில் மிகவும் மெதுவாக சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். இருப்பினும் கல்லூரிகள் விடுமுறை குறித்த தகவல் இன்னும்  வெளிவரவில்லை.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 48 மிமீ மழையும், தரமணியில் 38 மிமீ மழையும், சென்னை விமான நிலையத்தில் 50 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் கனமழையும், நாளை மறுநாள் அதிக கனமழையும் பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ம் வகுப்பு பொதுத்தேர்வு!.. சிசிடிவி கேமரா கண்காணிப்பு!.. தமிழக அரசு உத்தரவு...

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!.. இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்தது.. ஆனால்!.. பில்கேட்ஸ் அதிர்ச்சி..

ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை!.. மத்திய அரசு அதிரடி...

விஜயுடன் டான்ஸ்!. எங்க வருமானம் வருதோ அங்கயே போங்க!. கோபப்பட்ட உதயநிதி!...

குப்பையை கிளறியதில் கிடைத்த பொக்கிஷம். பல கோடி மதிப்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments