Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் மல்லையாவை பார்த்தேன்.. ஆனால் பார்க்கவில்லை : அருண்ஜேட்லி

விஜய் மல்லையாவை பார்த்தேன்.. ஆனால் பார்க்கவில்லை : அருண்ஜேட்லி
, வியாழன், 13 செப்டம்பர் 2018 (08:29 IST)
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச்சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 

 
லண்டனில் விஜய்மல்லையா கூறியபோது, 'நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சி செய்ததாகவும், வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது குறித்து அவரிடம் ஆலோசனை செய்ததாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜய் மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசுதான் மறைமுகமாக உதவி செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் விஜய் மல்லையாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அருண்ஜேட்லி “விஜய் மல்லையா கூறியது பொய்யான தகவல்.2014ம் ஆண்டு அவரை சந்திக்க நான் நேரம் ஒதுக்கவில்லை. அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். எப்போதாவது சபைக்கு வருவார். ஒருமுறை எனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, எனை நோக்கி வந்த அவர் “கடன் தீர்வுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்’ என நடந்தபடியே கூறினார். நான் உடனே “என்னிடம் பேசுவதில் பலன் இல்லை. வங்கிகளை அணுகுங்கள்” எனக் கூறினேன். அவர் கையில் வைத்திருந்த ஆவணங்களை கூடா நான் வங்கி பார்க்கவில்லை. எனவே அவர் கூறுவது முற்றிலும் பொய்” என அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்மல்லையாவை சந்திக்கவில்லை: அருண்ஜெட்லி மறுப்பு