Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் குறித்து சர்ச்சை பேச்சு: ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Webdunia
வியாழன், 31 மே 2018 (08:20 IST)
நேற்று தூத்துகுடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார்.
 
இந்த நிலையில் ரஜினியின் பேச்சை திரித்து போராடியவர்கள் எல்லோருமே சமூக விரோதிகள் என ரஜினி கூறியதாகவும், போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒருசில கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சற்றுமுன்னர் பாதுகாப்பிற்காக போலீஸ் வந்ததாக கூறப்படுகிறது.
 
தூத்துகுடியில் நேற்று ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் ரஜினியின் பேச்சை திரித்து எதிர்மறை கருத்துக்களை பரப்பி வருவதாகவும், சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த ரஜினிகாந்த்துக்கு அரசியலில் நடிக்க தெரியாததால் வந்த நிலைதான் இது என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை..!

பாம்பன் அருகே 4 கிராமங்களில் உள்வாங்கிய கடல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பயண திட்டத்தை மாற்றுங்கள்.. சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு அறிவுரை..!

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை.. அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments