Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆலமரம் - ‌சிற‌ப்பு‌ம், குணமு‌ம்!

ஆலமரம் - ‌சிற‌ப்பு‌ம், குணமு‌ம்!
, வியாழன், 13 அக்டோபர் 2011 (18:23 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்‌து‌னியா.கா‌ம்: ஆலமரம் பற்றி ஆன்மிகத்தில் பெரிதாகப் பேசப்படுகிறது. அதைப்பற்றி விவரமாகக் கூறுங்கள்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். ஏனென்றால், ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி உயரவோ, வளரவோ முடியாது. அதுபோன்ற சக்தி கொண்டது ஆலமரம்.

அடுத்ததாக, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது.

தவிர, ஆலமரங்கள் சில கோயில்களுக்கு தல விருட்சங்களாகவும் இருக்கிறது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தால் சிலதெல்லாம் சித்தியாகும். அரச மரத்தை போதி மரம் என்று சொல்கிறோம். ஆனால், இலங்கை அனுராதாபுரத்தில் உள்ள போதி மரம் ஆலமரம்தான்.

மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு.

சில எல்லைத் தெய்வங்களுக்கு ஆலம் பழம் நெய்வேத்தியமாக இருக்கிறது. தவிர, ஆலமரங்கள் இருந்த இடத்தில் முனிவர்கள், சித்தர்கள் அமர்ந்து அந்தக் காலத்தில் தவம் செய்திருக்கிறார்கள். பொதுவாக குளிர்ச்சியான இடத்தைத் தேடி அவர்கள் உட்காருவார்கள். சாதகமான சக்தியையும் தரக்கூடியது ஆலமரம்.

மேலும், ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil