Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆலமரத்தின் முக்கியத்துவம்!

ஆலமரத்தின் முக்கியத்துவம்!
, வெள்ளி, 14 ஜனவரி 2011 (17:46 IST)
ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று சொல்வார்களே. பெரியவர்கள் வாழ்த்தும் போது கூட பெரிய மரங்களைத்தான் சொல்வார்கள். அதில் தழைப்பிற்கு உரிய மரம் ஆலமரம். தழைத்து ஓங்கி கிளை கோத்திரமாக வாழ்வது என்பது சொல்வார்களே.
FILE

அதன்பிறகு, ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. நாலடியாரும், திருக்குறளும் படித்தால் வாழ்க்கை சிறக்கும். ஆலங்குச்சியும், வேலங்குச்சியும் - கருவேல மரம் என்று தனியாக இருக்கிறது. அந்த கருவேல மரப்பட்டையில் அவ்வளவு விசேஷம் இருக்கிறது. அதனால் கருவேல மரக்குச்சியிலும், ஆலமரக்குச்சியிலும் பல் தேய்த்தால் ஈறுகள் வலுவடையும். பல் தேய்க்கும் போது கெட்ட பித்த நீர்களெல்லாம் உமிழ் நீரோடு கலந்து வெளியே வந்துவிடும். அதனால்தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொன்னது.

அதுமட்டுமல்ல, மிகவும் புனிதமானது இந்த மரம். இந்துக்கள், புத்த மதத்தைச் சார்ந்தவர்கள், ஜைணர்கள் இந்த மூன்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் புனிதமான மரம். இதில் பல மகான்கள், சித்தர்களெல்லாம் அமர்ந்து தவநிலை அடைந்திருக்கிறார்கள். இந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தால் குளிர்சாதனத்தைவிட நன்றாக இருக்கும். அக்னி நட்சத்திரக் காலங்களில் கூட குளுகுளுவென்று இருக்கும். ஏனென்றால் அதனுடைய இலை அமைப்பில் அதிகமான குளோர·பில் அமைந்திருக்கிறது. பச்சையம் என்கிறோமே அது அதிகம். மேலும், சின்னதாக மெழுகுத் தன்மை அந்த இலையில் இருக்கும். அதனால் அது வெப்பம் அதிகமாகத் தாக்காத அளவிற்கு கட்டிக் காக்கிறது.

சரியாகப் படிக்காத பிள்ளைகளை ஆலமரத்தின் கீழ் உட்காரவைத்து படிக்க வைத்துப் பாருங்கள், பிறகு சொல்லுங்கள். மக்கு என்று சொல்பவர்களைக் கூட, ஆலமரத்தின் கீழ் போய் உட்கார்ந்தாலே ஒரு சாத்வீகமான எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும். எமோஷக், டென்ஷன், இரத்த அழுத்தம் போன்றதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அவர்களுக்கே தெரியாமல் தலை முடியிலிருந்து கால் பாதம் வரை ஒரு மசாஜ் நடந்து கொண்டிருக்கும். அது அவர்களுக்குத் தெரியாது.

மசாஜுக்குப் போனால் எப்படி உட்காருகிறோமே, அதே மாதிரி இங்கே சும்மா உட்கார வேண்டும். அப்படி உட்கார்ந்தால் தானாக மகிழ்ச்சி மலரும். அப்படியே படிப்படியாக டென்ஷன், எமோஷனெல்லாம் குறைவதை உணரலாம்.

மன அமைதியைக் கொடுக்கும். நினைவாற்றலைத் தரக்கூடியது. அந்த மரத்தின் காற்றை சுவாசித்தாலே நினைவாற்றல் பெருகும். அதனால்தான் மக்குப் பிள்ளைகளைக் கூட அங்கு உட்கார வைத்துப் பாருங்கள் அவன் நன்றாகப் படிப்பான். ஒருவிதமான பதற்றம் விலக ஆரம்பித்தாலே மூளை அனைத்தையும் பதியவைக்கத் தொடங்கும்.

இதுமட்டுமல்லாமல், மூலம் அந்தக் காற்றால் குணமாகிறது. ஏனென்றால், அந்தக் காற்றில் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய வெப்பத்தைக் குறைக்கக்கூடிய சக்தி இருக்கிறது. வெட்ட வெட்ட முத்தினால் குட்ட என்று சொல்வார்கள். உடம்பில் அதிகச் சூடு ஏற்பட்டால் அதனை வெட்டச் சூடு என்பார்கள். இந்த வெட்ட அதிகமானால் குட்ட. அதாவது, உஷ்ணம் அதிகமானால் குஷ்டம் வந்துவிடும். இந்த வெட்ட குட்ட இரண்டையுமே தணிக்கக் கூடிய நிழல், காற்று அதெல்லாம் உண்டு.

அதற்கடுத்ததாக, என்னுடைய தாத்தா ஒரு தண்டம் வைத்திருப்பார். நெடுவழிப் பயணத்தின் போதெல்லாம் அதை கையில் எடுத்துக்கொள்வார். அவரிடம் 4 நாட்களாக ஜுரம் என்று சொல்வார்கள், அதில் 4 தட்டு தட்டுவார். இதேபோல, குழந்தை சரியாகத் தூங்கவேயில்லையென்றால் அதற்கு 4 தட்டு தட்டுவார். வேப்பிலையால் மந்திரித்துவிட்டு அந்த தண்டத்தால் 4 தட்டு தட்டுவார். அதன்பிறகு, காத்து கருப்பு என்று பயப்படுபவர்களுக்கு 4 தட்டு தட்டுவார்.

ஏன் தாத்தா வரபவர்களையெல்லாம் அடித்துக் கொண்டிருக்கி‌றீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லப்பா, பழமையான ஆல மரத்தினுடைய கம்பு இது. அதில்தான் இதை செய்திருக்கிறேன். ஆலமரத்திற்கென்று சில குணங்கள் உண்டு. அதீத சக்திகள் உண்டு. அதனால் இதில் தட்டினால் சில மாற்றங்கள் உண்டாகும். தெய்வ நம்பிக்கையுடன் அதைச் செய்யும் போது குணப்படுத்தும் தன்மையை அது அதிகரிக்கும். இன்னமும் அந்த தண்டம் என்னுடைய அப்பாவிடம் இருக்கிறது. அதைத் தொடும்போதே ஒருவிதமான உணர்வு ஏற்படும். அதுபோன்ற குணங்கள் அதற்கு உண்டு.

காது, மூக்குப் பிரச்சனைகளுக்கு ஆலம்பாலை பக்குபவப்படுத்தி பயன்படுத்தினால் அது நீங்கும். அடிப்பட்டு வீங்கிய இடத்தில் இந்தப் பாலைத் தடவினால் வீக்கம் வடிந்துவிடும். அதற்கடுத்து, இதன் இலையில் விந்தணுக்களை அதிகரிக்கக் கூடிய சக்தி இருக்கிறது. விந்தணுக்களின் உயிர்த்தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் உண்டு. ஆலமரப்பட்டையை உலர்த்தி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடம்பு பளபளப்பாக ஆகும். இதையெல்லாம் சித்த மருத்துவர்கள் தருவார்கள். ஆலம்பழத்திற்கு சிறுநீர் பாதை கிருமி பிரச்சனைகள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய அமைப்புகள் உண்டு.

இதுமாதிரி தொட்டதனைத்தும் நமக்கு பயன்தரக்கூடியது. அப்படிப்பட்ட மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தால் நமக்கு எவ்வளவு நன்றாக இருக்கும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil