தீபாவளி என்றால் சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது.
தீபாவளியையொட்டி 4-ந் தேதி பகல் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்(0637) புறப்பட்டு செல்கிறது.
இந்த ரயில் இரவு 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்கத்தில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு சிறப்பு ரயில்(0638) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மாலை 4.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) நடந்து முடிந்தது.