22ஆம் தேதி துவங்குகிறது தீபத்திருவிழா
, செவ்வாய், 17 நவம்பர் 2009 (11:58 IST)
திருவாண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரும் 22ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 22ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.வரும் டிசம்பர் 1ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டும் வருகிற 22 ஆம் தேதியே, தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. 1 ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,6668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் வருவார்கள். இந்த ஆண்டு 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.