கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளது. அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
அந்த தண்ணீர் தமிழகத்தின் எல்லையான ஒகேனக்கல் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள பிலிகுண்டுலு பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
இதனால் ஒகேனக்கல் ஐந்தருவியில் கொட்டும் நீர் செந்நிறமாக காட்சி அளிக்கிறது. அதிகமான நீர் கொட்டுவதால் அருவிகளில் குளிக்க நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவிக்குச் செல்லும் நடைபாதிகள் முழுவதும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
ஒகேனக்கல்லில் நடத்தப்படும் படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.