Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைப்பதே எனது லட்சியம்: கருணாநிதி பேட்டி

Advertiesment
கருணாநிதி
, புதன், 11 மே 2016 (15:27 IST)
தமிழ்ச் சமுதாயமும், திராவிட சமுதாயமும் வாழ வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


 
 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
அதிமுக அரசுயின் இலவச திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்கவில்லை. இந்நிலையில் மேலும் பல இலவசங்களை வாக்குறிதியாக அளித்துள்ளது அதிமுக.
 
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக, திமுகவின் தேர்தல் அறிக்கையை நகலெடுத்து தயாரிக்கப்பட்டது.
 
சாத்தியம் இல்லாத இலவச திட்டங்களை தவிர அதிமுக தேர்தல் அறிக்கையில் வேறு எந்த சிறப்பம்சமும் இல்லை. இலவச வாக்குறுதிகளாலும், பணபலத்தாலும் எப்படியாவது வெற்றிப் பெற்று விடலாம் என்ற ஜெயலலிதாவின் பகல் கனவு நனவாகாது, என்றார்.
 
மேலும் தமிழ்ச் சமுதாயமும், திராவிட சமுதாயமும் வாழ வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பெரியார், அண்ணா கண்ட கனவுகளை நனவாக்க நான் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
 
கருணாநிதியின் இத்தகையப் பேட்டி, அவர் இன்றும் மன உறுதியுடன் தெளிவாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.    

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி