பண்ருட்டி தொகுதியில் பவர் கட் - வேட்பாளர்கள் தவிப்பு
பண்ருட்டி தொகுதியில் பவர் கட் - வேட்பாளர்கள் தவிப்பு
பண்ருட்டி தொகுதியில் பவர் கட் காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவை தொகுதிக்கு, கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், 68 மையங்களில் 9 ஆயிரத்து 621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பவர் கட் காரணமாக வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.