நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி 3154 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். திமுக-வை சேர்ந்த கு.க.செல்வம் வெற்றிப் பெற்றார்