Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டி : மூன்று ஓட்டு பதிவு எந்திரங்கள்

Advertiesment
RK Nagar
, வெள்ளி, 6 மே 2016 (11:13 IST)
சென்னையில் ஆர்.கே நகர் என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்குப்பதிவின் போது அங்கு மூன்று ஓட்டு பதிவு எந்திரங்கள் வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் அந்த தொகுதியில் அவரோடு சேர்த்து மொத்தம் 45 பேர் போட்டியிடுகிறார்கள்.  பொதுவாக ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை மட்டுமே இடம் பெறச் செய்ய முடியும்.
 
ஆனால், அந்த தொகுதியில் 45 பேர் போட்டியிடுவதால் மூன்று வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
 
முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் பெயரும், அதன்பின் பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள் பெயரும், கடைசியில் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பெயரும் வரிசையாக இடம்பெறும்.
 
இதற்கான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே எடுத்து வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.
 
இதில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் 4வதாக இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மாரியம்மன் மீது சத்தியம் செய்து சொன்னேன்' - திருமாவளவன்