Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனநாயகத்திற்கு இது நல்லது அல்ல: ஜி.கே.வாசன் சொல்ல வருவது என்ன?

ஜனநாயகத்திற்கு இது நல்லது அல்ல: ஜி.கே.வாசன் சொல்ல வருவது என்ன?

ஜனநாயகத்திற்கு இது நல்லது அல்ல:  ஜி.கே.வாசன் சொல்ல வருவது என்ன?
, வெள்ளி, 20 மே 2016 (17:41 IST)
சட்டப்பேரவைக்கு மற்ற கட்சிகள் இல்லாமல் அதிமுக மற்றும் திமுக மட்டுமே செல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தமாகா  அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை தமாகா ஏற்றுக் கொள்கிறது. புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன்.
 
கூட்டாட்சியை மக்கள் விரும்பவில்லை. ஆனாலும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்களுக்கு நன்றி. வரும் காலத்தில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு தகுந்தால் போல் எங்களது பணி அமையும். பணபலத்தை தடுக்க தமிழக தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.
 
மேலும், தேர்தலுக்கு எங்களுக்கு காலஅவகாசம் போதவில்லை. தேர்தல் தோல்வி குறித்து கூட்டணி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி கூட்டறிக்கை வெளியிடுவோம். தேர்தல் தோல்விக்கு வைகோ தான் காரணம் என்று கூறுவது தவறான தகவல். இதை நான் மறுக்கிறேன்.
 
சட்டப்பேரவைக்கு மற்ற கட்சிகள் இல்லாமல் அதிமுக மற்றும் திமுக மட்டுமே செல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறினார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்காக விரலை வெட்டிய அதிமுக தொண்டர் மருத்துவமனையில் அனுமதி