பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
, வியாழன், 19 மே 2016 (02:40 IST)
நடந்து முடிந்த 17ஆவது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டுக்கொண்டு வருகிறது.
தற்போதைய முன்னிலை நிலவரம்:
கூட்டணிகள் |
முன்னிலை 163/232 |
வெற்றி 69/232 |
அதிமுக + |
92 |
40 |
திமுக + காங். + |
70 |
29 |
ம.ந.கூ. |
- |
- |
பாமக |
01 |
- |
நாம் தமிழர் கட்சி |
- |
- |
பாஜக + |
- |
-
|
தேமுதிக தலைவரும், மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில், 47, 529 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு வெற்றிபெற்றுள்ளார்.
திருவிடைமருதூரில் திமுக வேட்பாளர் முனைவர் கோ.வி.செழியன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் யு.சேட்டு-வை தோற்கடித்துள்ளார்.
வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கஸ்தூரி வாசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பால்பாண்டியை தோற்கடித்துள்ளார்.
குன்னம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன், திமுக வேட்பாளர் தங்க துரைராஜ் அவர்களை தோல்வியுறச் செய்துள்ளார்.
=================================================================
அறந்தாங்கி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரத்தின சபாபதி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரனை தோற்கடித்துள்ளார்.
திரு.வி.க. நகர் திமுக வேட்பாளர் சிவக்குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நீலகண்டனை தோற்கடித்துள்ளார்.
சரத்குமார் தோல்வி:
திருச்செந்தூர் தொகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தோல்வி அடைந்துள்ளார்.
குன்னூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமு வெற்றி.
ஒட்டன்சத்திரத்தில் திமுக வேட்பாளர் சக்கரபாணி வெற்றி. அதிமுக வேட்பாளர் கிட்டுசாமியை தோற்கடித்தார்.
திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.ரகுபதி வெற்றி பெற்றுள்ளார்.
விராலிமலை தொகுதியில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.
சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமி வெற்றி. திமுக வேட்பாளர் அன்புமணி கணேசனை தோற்கடித்தார்.
கூட்டணிகள் |
முன்னிலை 232/232 |
வெற்றி 10/232 |
அதிமுக + |
133 |
6 |
திமுக + காங். + |
97 |
4 |
ம.ந.கூ. |
- |
- |
பாமக |
01 |
- |
நாம் தமிழர் கட்சி |
- |
- |
பாஜக + |
- |
-
|
=================================================================
திருமாவளவன் 83 வாக்குகளில் அதிர்ச்சி தோல்வி:
* காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 83 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி. அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி.
* ஆற்காடு தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரப்பன் வெற்றி. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.வி.ராமதாஸை தோற்கடித்துள்ளார்.
* மதுரை தெற்கு அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றி. திமுக வேட்பாளர் எம்.பாலச்சந்திரனை தோற்கடித்தார்.
* சீர்காழி அதிமுக வேட்பாளர் சி.வி.பாரதி வெற்றி.
வளர்மதி தோல்வி:
ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக அமைச்சர் வளர்மதி தோல்வி.
* சேலம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் சின்னதம்பி வெற்றி.
* நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கதுரை
* வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் பரமசிவம் வெற்றி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேற்றியை தோற்கடித்தார்.
* ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதன் வெற்றி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஞானகலைச்செல்வனை தோற்கடித்தார்.
* சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மோகன் வேர்றி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா தோற்கடித்தார்.
* கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் கீதா வெற்றி. தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தவமணி பத்மநாபனை தோற்கடித்தார்.
* நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் வெற்றி.
=================================================================
கூட்டணிகள் |
முன்னிலை 232/232 |
வெற்றி 19/232 |
அதிமுக + |
127 |
9 |
திமுக + காங். + |
104 |
10 |
ம.ந.கூ. |
- |
- |
பாமக |
01 |
- |
நாம் தமிழர் கட்சி |
- |
- |
பாஜக + |
- |
-
|
கருணாநிதி வெற்றி:
திமுக தலைவர் திருவாரூர் தொகுதியில் வெற்றி. 13ஆவது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர்செல்வத்தை தோற்கடித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் அதிமுக வேட்பாளர் கஸ்தூரிவாசன் வெற்றி. திமுக வேட்பாளர் பால்பாண்டியை 8,844 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் வெற்றி.
=================================================================
கூட்டணிகள் |
முன்னிலை 210/232 |
வெற்றி 21/232 |
அதிமுக + |
119 |
11 |
திமுக + காங். + |
90 |
10 |
ம.ந.கூ. |
- |
- |
பாமக |
01 |
- |
நாம் தமிழர் கட்சி |
- |
- |
பாஜக + |
- |
-
|
உதகமண்டலம் காங்கிரஸ் கணேசன் வெற்றி.
மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் வி.ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் குத்தாளன் க.அன்பழகனை 5,584 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கூடலூர் திமுக வேட்பாளர் திராவிட மணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலைச்செல்வனை தோற்கடித்தார்.
பவானி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பண்ணன் வெற்றி. திமுகவின் சிவக்குமாரை 25,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருச்சுழியூர் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி. அதிமுகவின் தினேஷ்பாபுவை 24,934 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
=================================================================
கூட்டணிகள் |
முன்னிலை 232/232 |
வெற்றி 12/232 |
அதிமுக + |
135 |
7 |
திமுக + காங். + |
96 |
5 |
ம.ந.கூ. |
- |
- |
பாமக |
01 |
- |
நாம் தமிழர் கட்சி |
- |
- |
பாஜக + |
- |
-
|
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடராஜன் வெற்றி.
சோழவந்தான் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம், திமுக வேட்பாளர் பவானியை 24,765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பரமக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தையா வெற்றி. திமுகவின் திசைவீரனை 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி 28,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் நசீர் அகமது தோல்வி அடைந்துள்ளார்.
நாகை கீழ்வேளூர் தொகுதி திமுக வேட்பாளர் மதிவாணன் வெற்றி. அதிமுகவின் மீனாவை 10,170 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
=================================================================
1 மணி நிலவரம்:
கூட்டணிகள் |
முன்னிலை 232/232 |
வெற்றி 10/232 |
அதிமுக + |
135 |
6 |
திமுக + காங். + |
96 |
4 |
ம.ந.கூ. |
- |
- |
பாமக |
01 |
- |
நாம் தமிழர் கட்சி |
- |
- |
பாஜக + |
- |
- |
வாணியம்பாடி அதிமுக வேட்பாளர் நிலோபர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சையது பாரூக்-கை தோற்கடித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் சின்னராஜ் வெற்றி. திமுக வேட்பாளர் சுரேந்திரன் தோல்வி.
குடியாத்தம் அதிமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் வெற்றிபெற்றுள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைச்சர் பா.வளர்மதி முன்னிலை வகிக்கிறார்.
=================================================================
மு.க.ஸ்டாலின் வெற்றி:
திமுக பொருளாளர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜே.சி.பி.பிரபாகரனை தோற்கடித்துள்ளார்.
விளாத்திக்குளம் அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி 18,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அடுத்த கட்டுரையில்