சசிகலா புஷ்பா அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் நீக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் சசிகலா, சிவாவை கன்னத்தில் அறைந்தார்.
அதைத்தொடர்ந்து திருச்சி சிவாவை நான் தான் அறைந்தேன் என்றும், நான்கு முறை அறைந்தேன் என்றும் செய்தியாளர்கள் கேட்டதற்கு தைரியமாக பதில் அளித்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேசிய சசிகலா புஷ்பா, இச்சம்பவம் குறித்து திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.