சென்னையில் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி
சென்னையில் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் நாளை நடைபெற உள்ளது.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி-யின் 25ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் மே 21 ஆம் தேதி அன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணி அளவில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.