மக்கள் புறக்கணித்த மக்கள் நலக்கூட்டணி
மக்கள் புறக்கணித்த மக்கள் நலக்கூட்டணி
தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணித்து வருவதாக வெளிவரும் தேர்தல் நிலவரம் தெரிவிக்கிறது.
மக்கள் நலக் கூட்டணியை, பொது மக்கள் புறக்கணித்த காரணத்தினால் இதுவரை ஒரு இடத்தில் கூட அந்தக் கூட்டணி முன்னிலை பெறவில்லை.
தமிழகத்தில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமாகா ஆகியவை இணைந்து புதிய கூட்டணி அமைத்து மக்கள் நலக் கூட்டணி என பெயர் அமைத்து போட்டியிட்டனர். மேலும், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியிலே அவர் பின்தங்கியுள்ளார். அதே போல, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் பின்தங்கியுள்ளார். இதுபோலவே, மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருமே பின்தங்கியுள்ளனர். இதனால் அக்கூட்டணியை மக்கள் புறக்கணித்துள்ளது தெரிய வருகிறது.