Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு இன்று முதல் தொடங்கியது

Advertiesment
Postal vote
, சனி, 7 மே 2016 (13:25 IST)
அரசு அலுவலகர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று முதல் தொடங்கியது.


 

 
தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசு ஊழியர்கள், தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தப்படுவது வாடிக்கையான ஒன்று.
 
எனவே, அவர்கள் முன்கூட்டியே தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்து அனுப்புவார்கள். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் பணியை கவனிக்க உள்ள தேர்தல் அலுவலர்கள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் இன்று அறிவித்தார்.
 
தபால் மூலம் வாக்களிக்க மே 14ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே வாக்குச் சாவடி அலுவலர்கள், காவலர்கள் தங்கள் ஓட்டுகளை தபால் மூலம் அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் குத்துச்சண்டை சாம்பியனை, ரத்தம் ஒழுக குத்துவிட்ட போலிஸ் [வீடியோ]