அதிமுகவில் இணைந்த பாமக வேட்பாளர்

அதிமுகவில் இணைந்த பாமக வேட்பாளர்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (15:08 IST)
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பாமக வேட்பாளர் திருப்பதி அதிமுகவில் இணைந்துள்ளார்.
 

 
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர்கள் சட்டப் பேரவைத் தேர்தலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதலும் பாமக ராமதாஸ் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
 
இந்த நிலையில், நெல்லை பாமக நாங்குநேரி பாமக வேட்பாளர் திருப்பதி திடீரென நெல்லை அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் நயினார் நாகேந்திரன்  முன்னிலையில் இணைந்தார்.
 
பாமக வேட்பாளர் திருப்பதி, தனது டிரைவரின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, டிரைவரின்  மனைவி போலீஸ்-ல் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான், பாமக வேட்பாளர் திருப்பதி அதிமுகவில் இணைந்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

அடுத்த கட்டுரையில்