Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டுல திமுக, அதிமுக தான்

Advertiesment
தமிழ்நாட்டுல திமுக, அதிமுக தான்
, வியாழன், 19 மே 2016 (08:39 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் மாறி மாறி வெற்றி பெறுவது எப்பொதும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தான்


 

இன்றைய தேர்தல் முடிவுகள் குறித்து டீ கடையில் வழக்கம் போல் பொதுமக்களின் அரசியல் குறித்த விவாதம்

1: என்னயா இன்னைக்கு தேர்தல் முடிவா;  பேப்பர புரட்டி புரட்டி பார்த்துகிட்டு இருக்க,

2: இன்னைக்கு யாரு ஆட்சி பிடிக்க போறதுனு தெரிந்திடும்; கடந்த 5 வருட செயல்பாடுக்கு முடிவு இந்த தேர்தல் தான்.

1: மாற்றம் மாற்றமுனு யார் என்ன சென்னாலும் தமிழ்நாட்டுல திமுக, அதிமுக தான் ஆகிபோச்சு. எப்போதும் இந்த இரண்டு கட்சி தான் நம்ம மாநிலத்துக்கு.

2: இந்த முறை கட்டாயம் மாற்றம் வரும் பாருங்க, கூட்டணி புரச்சி வேற நடந்திருக்கு, புது வாக்காளர்கள் எல்லாம் திமுக, அதிமுக வேண்டாம் எங்களுக்கு வேறு புதிய கட்சி தான் வேணுமுனு அடம்பிடிக்குராங்க, பார்போம்.

3: அட போங்கையா எந்த கட்சி வந்தாலும் நம்ம மக்களோட இலவச எதிர்பார்ப
வைத்தே சுலபமா ஏமாத்திடுராங்க.

பொரியார் பெண் அடிமைக்கு ஒரு ஆழமான சிந்திக்கக் கூடிய காரணம் ஒன்னு சென்னாரு; பெண்கள் எப்பொது நகை அணிவதை தவிர்க்கிறார்களோ அப்பொதும் அடிமைதனத்தில் இருந்து மீள முடியும் என்றார். அதாவது நகை வாங்கி கொடுப்பதன் மூலம் ஆண்கள் தன் மனைவிகளை மிக எளிமையாக அடிமையாக்கி விடுகிறார்கள், பெண்கள் அதை தவிர்த்தால் கணவன் கொடுக்கும் நான்கு அடிக்கு திரும்ப பதில் அடியாக கட்டாயம் ஒரு அடியாவது கொடுப்பார்கள். அதுபோல தான் நம்ம மக்கள்.

1: என்ன இப்படி சொல்லிடிங்க; திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு என்ன செய்யல, அடிப்படை தேவை எல்லாம் செய்து கொடுத்து முன்னேற்றம் அடைய இருகாங்க, அதுபோதாதா.

 3: அப்படி இல்லையா நம்ம இப்போ அடிப்படை தேவைகளில் இருந்து ஒரளவு மீண்டு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோம். உலக அரசியல்படி பார்த்தா வளர்ந்த நாடுகளெல்லாம் வளர்ச்சி அடையும் நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாம் நம் நாட்டில் என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்வதோடு, அவர்கள் கைக்காட்டும் பொருட்களையெல்லாம் இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது.
இந்நிலையில் மாநில கட்சிகள் பேசிவது நம்மை முட்டாள் ஆக்குவதற்கா; அல்ல அவர்கள் முட்டால்கள்ளா என்று தெரியவில்லை.

1: எந்த அரசியல்வாதி வந்தாலும் ஊழல் செய்யதான் போறாங்க, இவங்க பத்தாதுனு அரசாங்க அதிகாரிகள் எந்த வேலை செய்யுறதா இருந்தாலும் பணம், பணம், பணம், பணம் அவர்கள் நாடி நரம்புகளெல்லம் பணம் ஊறிவிட்டது. அப்புறம் எப்படி? இதுல ஆளும் கட்சிகள் எல்லாம் அரசாங்க அதிகாரிகளுக்கு துணை வேற; பின்ன என்ன நடக்கும்.

4: நாஞ்சில சம்பத் கட்சி பொது கூட்டங்களில் கம்யூனிச கட்சிகளை பற்றி பேசும் போது சொல்லுவாரு; ஜீவானந்தம் என்ற தலைவர் ஒருவர் உண்டு, அவர் 17 வருடம் வனவாசம் சென்று விட்டு திரும்பும் போது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக தனது கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கே ஒரு 17 வயது பெண் அழுதுக் கொண்டு வருகிறாள், அவளிடம் உன் பெயர் என்ன? ஏன் அழுகிறாய் என்றார், அந்த இளம் பெண் அழுதுக் கொண்டே என் பெயர் பூங்குழலி, எனது அப்பா பெயர் ஜீவானந்தம் என்கிறாள்.

ஒரு காலத்தில் அப்படிப்பட்ட கட்சித் தலைவர்கள் இருந்த தமிழ்நாடு இது. ஆனால் இன்றைக்கு கட்சித் தலைவர்கள் எல்லாம் தங்கள் சுய நலத்திற்காகவும் ஆள வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியல் செய்து வருகிறார்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தபால் ஒட்டு எண்ணிக்கை : அதிமுக பின்னடைவு