கடும் வெயிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட சில கூட்டங்களில், கடும் வெயில் காரணமாக நான்கு பேர் உயிரிழக்க நேர்ந்தது. எனவே, வெயில் நேரத்தில் தேர்தல் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடும் வெயிலில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வெயிலில் இருந்து மக்களை காக்க நிழற்கூறையும், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்து வந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.