ஆர்.கே. நகரில் மு.க.ஸ்டாலின் பேனரை காவல்துறையினர் அகற்ற முயன்றதால், கோபமடைந்த திமுகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை ஆதரித்து திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பிரச்சாரத்திற்கு வருகை தரும் ஸ்டாலினை வரவேற்க 80 அடி உயரத்தில் பேனர் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த பேனர் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறி அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இதை அறிந்த திமுகவினர், பேனர் அகற்றுவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது திமுக தொண்டர் ஒருவர், பேனரை அகற்றினால் தீக்குளிப்பேன் என்று கூறினார்.
இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காவல் துறையினரின் பாதுக்காப்புடன் பேனர் அகற்றப்பட்டது.