மக்கள் நலக்கூட்டணியின் வேட்பாளர் கார் அடித்து நொறுக்கப்பட்டது
மக்கள் நலக்கூட்டணியின் வேட்பாளர் கார் அடித்து நொறுக்கப்பட்டது
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியின் வேட்பாளர் நாகை திருவள்ளுவன் பிரசாரம் செய்த வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியின் வேட்பாளர் நாகை திருவள்ளுவன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார். அவர் தாராபுரம் தெகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில், தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியின் வேட்பாளர் நாகை திருவள்ளுவன் பிரசாரம் செய்த வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. இதற்கு திமுக தான் காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலயைத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தோல்வி பயத்தில் இது போன்ற கீழ்தரமான செயல்படும் திமுகவினரை உடனே கைது செய்யப்பட வேண்டும் என நாகை திருவள்ளுவன் தரப்பினர் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை திருவள்ளுவன் கார் மீது தாக்குதலுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.