நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டு, 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் வலுவான எதிக்கட்சி அந்தஸ்தை பெற்றது திமுக.
இந்நிலையில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறுவதாக தெரிகிறது. அப்போது மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் துணைத் தலைவர் மற்றும் சட்டசபை கொறடாவாக துரை முருகன் தேர்வாகிறார்.
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியினர் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.