சதியில் சிக்கி விதியால் மீண்ட விஜயபாஸ்கர்
சதியில் சிக்கி விதியால் மீண்ட விஜயபாஸ்கர்
கரூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெறும் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தார்.
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் விஜயபாஸ்கரும், திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி சார்பில் பேங்க் சுப்பிரமணியன், தேமுதிக சார்பில் ரவி உள்ளிட்ட சிலர் போட்டியிட்டனர்.
இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் 81,936 வாக்குகள் பெற்றார். இதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியன் 81, 495 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே 441 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் ஆகும்.
இந்த தொகுதியில், அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தன்னை வெற்றிபெறவிடாமல் அதிமுக நிர்வாகிகள் சிலரே சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, கதறி கண்ணீர்விட்டார். இந்த நிலையில், சதியை மீறி விதியால் வெற்றிக்கனியை பறித்துள்ளார்.