Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா : அன்புமணி காட்டம்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (10:02 IST)
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்து மீண்டும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மக்களை ஏமாற்றுகிறார் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


 

 
நேற்று வெளியான அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், மொபைல் போன், இலவச மின்சாரம், செட்டாப் பாக்ஸ் என இலவசங்கள் இடம் பெற்றிருந்தது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த அன்புமணி “திராவிடக் கட்சிகள் இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றியுள்ளன. இந்த முறையும் இலவசங்களை கையிலெடுத்து ஏமாற்று வேலையை ஜெயலலிதா மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
 
2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு, முன்பிருந்ததைக் காட்டிலும் ரூ.1,40,000 கோடி கடன் அதிகமாகியிருக்கிறது மட்டும்தான் அவரின் சாதனையாகும்.
 
வெறும் இலவசங்களை அளித்து மக்களை முன்னேற விடாமல் அதிமுக, திமுக கட்சிகள் தடுத்துக் கொண்டே இருக்கிறது. பாமகவால் மட்டுமே மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை அளித்து அவர்களை முன்னேற்ற முடியும்” என்று கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments