Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிற்கு ஆறுதல் தந்த சென்னை வாசிகள்

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:23 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு முடிவுகள், சென்னை மாநகரம் திமுகவின் கைவசத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இன்று காலை 8 மணியளவில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. அதில் துவக்கும் முதல் திமுக முன்னனியில் இருந்தது. ஆனால் போகப் போக அதிமுக ஏறு முகம் காட்டியது. 
 
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவிலும் அதிமுகவே முன்னனியில் இருந்து வருகிறது. அதிமுக 130 தொகுதியிலும், திமுக 95 தொகுதியிலும் முன்னனியில் இருக்கிறது. எனவே ஏறக்குறைய அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
 
இருந்தாலும், 16 தொகுதிகள் கொண்ட சென்னையில் 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கொளத்தூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ராயபுரம், ஆயிரம் விளக்கு தொகுதிளில் திமுக முன்னனியில் இருக்கிறது.
 
இதனால், சென்னை  திமுகவின் கோட்டை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments