திமுக-வை காய்ச்சி எடுத்த மு.க.அழகிரி வாரிசு

திமுக-வை காய்ச்சி எடுத்த மு.க.அழகிரி வாரிசு

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:08 IST)
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, திமுக தோல்வி குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. இதற்கு அடுத்து, திமுக வந்து கொண்டுள்ளது. இருப்பினும், தமிழகம் முழுக்க திமுக தோல்வி முகத்தில் உள்ளது. இதனால், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முக்கியத் தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்த நிலையில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, திமுக தோல்வி குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 16 நிமிடங்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மூத்தவன் சொல்லும், முத்தின நெல்லிக்காயும் புளிக்கத்தான் செய்யும். ஆனால், எதிர்காலத்திற்கு நல்லது என வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. கருத்துக்கணிப்பில் தகவல்!...

கேரளாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்!. கருத்துக்கணிப்பில் தகவல்!..

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கிறாரா மம்தா பானர்ஜி?.. கருத்துக்கணிப்பில் தகவல்..

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கும்!.. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தகவல்..

தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான்!.. கருத்துக்கணிப்பில் தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments