Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வியை சந்திக்கிறதா திமுக?

Advertiesment
தொடர்ச்சியாக மூன்று முறை தோல்வியை சந்திக்கிறதா திமுக?
, வியாழன், 19 மே 2016 (12:01 IST)
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலின் முடிவுகள் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இன்று காலை 8 மணியளவில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. அதில் துவக்கும் முதல் திமுக முன்னனியில் இருந்தது. ஆனால் போகப் போக அதிமுக ஏறு முகம் காட்டியது. 
 
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவிலும் அதிமுகவே முன்னனியில் இருந்து வருகிறது. அதிமுக 138 தொகுதியிலும், திமுக 92 தொகுதியிலும் முன்னனியில் இருக்கிறது.
 
இது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வெற்றி பெறுவது உறுதி என்ற மனநிலைக்கு வந்துள்ள அவர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என்று அவர்கள் முழக்கம் இட்டு வருகின்றனர்
 
ஆனால் திமுக தொண்டர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது திமுக. அதேபோல் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது  திமுக. தற்போது வெளியாகியுள்ள 2016 சட்டசபை தேர்தல் முடிவுகளை பார்த்தால், அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
 
தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை திமுக தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். 
 
இது திமுக மேல் மட்ட தலைவர்களிலிருந்து மற்றும் அடிமட்ட தொண்டர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோபாலபுரத்தில் ருத்திரதாண்டவம் ஆடிய கருணாநிதி