Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி பெற்றுத்தான் செல்போன் பிரசாரம் செய்ய வேண்டும்: தேர்தல் அதிகாரி அதிரடி

Webdunia
சனி, 7 மே 2016 (08:34 IST)
அரசியல் கட்சிள் செல்போன் பிரசாரம் செய்வதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


 


சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பி.சந்திரமோகன் செல்போன் நிறுவனங்கள் மற்றும் 'எப்.எம்.' நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் சென்னையில் கலந்தாய்வு நடத்தினார்.
 
இதைத் தொடர்ந்து, பி.சந்திரமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தேர்தலை குறிவைத்து வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சியினரோ குழு குறுந்தகவல், குரல் பதிவு உள்ளிட்ட செல்போன் பிரசாரம் செய்வதற்கு ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முறையாக அனுமதி பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அனுமதி பெறாமல் குழு குறுந்தகவல் அனுப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
 
இதுவரை சென்னையில் ரூ.8 கோடியே 49 லட்சம் பறிமுதல் செய்துள்ளோம். இதில் முறையான ஆவணங்களை காண்பித்ததால் ரூ.2 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 195 உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
மீதமுள்ள பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments