Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராடும் பொதுமக்கள்

Webdunia
சனி, 7 மே 2016 (07:49 IST)
ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்வும் அவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளனர்.


 


ஊட்டி நகராட்சியின் 36 ஆவது வார்டுக்குட்பட்டது மஞ்சனக்கொரை காசா காலனி. இந்த பகுதியில், 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தின்ர் வசித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தப் பகுதி மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. என்றும், ,இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
இதனால் போபம் அடைந்த இப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் இதனால், கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது என்றும், தெருவிளக்கு வசதி செய்துத் தரப்பட்வில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கழிப்பிட வசதிகளை செய்து தருமாறும் கோரிக்கை வைத்துள்ளர்.
 
இத்தகைய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணிக்கு வைகோ வந்தால் அவருக்கு எம்பி பதவி உறுதி: மத்திய அமைச்சர்

சின்னசாமி மைதான சோகம்: நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் காதணிகள் மாயம்: பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குன்றத்தூர் அபிராமி! - தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல்.. திமுகவினருக்கு தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.. விட மாட்டோம்.. தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments