தமிழக சட்டபேரவை தேர்தலில் பாஜக கிட்டத்தட்ட தனித்தே போட்டியிடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இழந்தது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதனால் அக்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை. இந்நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஒருவர் திடீரென அதிமுகவில் இணைந்தார். இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகியாக பதவி வகித்தார்.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மடத்துக் குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் முத்துக்குமார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் திடீரென அதிமுகவில் சேர்ந்தார். இது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியினர் சரியாக ஒத்துழைக்காததால் விரக்தியில் அவர் இந்த முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது.