நான் தப்பித்தேனே.... மம்மி... வைகோ உற்சாகம்
நான் தப்பித்தேனே.... மம்மி... வைகோ உற்சாகம்
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தோல்வியை சந்தித்து வரும் வேளையில், நான் தப்பித்தேனே... மம்மி என வைகோ உற்சாகம் அடைந்துள்ளதாக ஃபேஸ்புக்-கில் மிம்மிஸ் போட்டு வருகின்றனர்.
நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில், கோவில்பட்டியில் தொகுதியில் போட்டியிட வைகோ முடிவு செய்து களம் இறங்கினார். பின்பு, திடீரென தனது முடிவை வாபஸ் பெற்றார்.
ஆனால், இந்த முடிவை மறுசீலனை செய்ய வேண்டும் என விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த கோரிக்கையை வைகோ புறக்கணித்தார். இதனால், அவர் படுதேல்வியில் இருந்து தப்பித்தார்.
ஆனால், தேர்தல் களத்தில் இறங்கிய அவரது சகாக்கள் திருமாவளவன் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் வெற்றிக்கனியை கோட்டைவிட்டனர். மேலும், தோல்விப் பாதையில் செல்வதாக ஃபேஸ்புக்கில் மிம்மீஸ் போட்டு கலக்கி வருகின்றனர்.