குடும்ப அரசியலை வீழ்த்திய மக்கள்: ஜெயலலிதா
, வியாழன், 19 மே 2016 (13:14 IST)
அதிமுக வெற்றி உறுதியானதை அடுத்து முதல்வர் ஜெயலலிதா குடும்ப அரசியலை மக்கள் வீழ்த்தினார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதில் 6 இடங்களில் வெற்றிப் பெற்று இன்னும் தொடர்ந்து 125 இடங்களில் முன்னிலை வகித்து வரும் அதிமுக கட்சியின் வெற்றி உறுதியாகியது.
இந்நிலையில் அதிமுக கட்சித் தலைவர் ஜெயலலிதா; தன்னை மீண்டும் தமிழக முதலமைச்சராக தேர்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், குடும்ப அரசியலை மக்கள் வீழ்த்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் திமுக தனது மோசமான பிரச்சாரத்தால் தான் தோல்வி அடைந்தது என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்