Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ்-யை ஜெயிக்க விடாதே..... வேட்டியை மடித்துக் கட்டும் மாஜி மாண்புமிகு

ஓ.பி.எஸ்-யை ஜெயிக்க விடாதே..... வேட்டியை மடித்துக் கட்டும் மாஜி மாண்புமிகு

வேதவல்லி
சனி, 14 மே 2016 (10:27 IST)
அதிமுக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வெற்றிபெறக் கூடாது என அதிமுக மாஜி மாண்புமிகு சிலர் உள்ளடி வேலையில் இறங்கியுள்ளார்.
 

 
தேனி மாவட்டம், போடி தொகுதியில், அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்மும், திமுக சார்பில் லட்சுமணனும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், தேமுதிக, பாஜக போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும், இங்கு திமுக, அதிமுக இடையேதான் பலத்த போட்டி நிலவிவருகிறது.
 
தற்போதைய ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று ஜெயலலிதா கடும் முயற்சி செய்து வருகிறார். இதனால், தமிழகத்தில் மீண்டும் இலை மலரும் என அதிமுக தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.
 
இந்த நிலையில், அதிமுக ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு,  நம்பிக்கைகுரியவராக மீண்டும் வந்துவிடுவார் என்று அதிமுகவில் சில மாஜி மாண்புகள்  சிலர் ஸ்மைல் செய்து, நாம் மீண்டும் நல்ல பதவிக்கு வரமுடியாது என்றும், முதல்வர் பதவி ஆசையால் சிலர் இது போன்ற காய்நகர்த்தலை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனால்,  ஓ.பி.எஸ். மீண்டும் வெற்றிபெறக்கூடாது என கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மாஜி மாண்புமிகுகள் ரகசிய கூட்டம் போட்டு, போடி தொகுதியில் கரன்ஸிகளை இறங்கிவிட்டுள்ளார்களாம்.
 
திமுக வேட்பாளர் லட்சுமணனுக்கு தேவையான உதவிகளை சிலர் மறைமுகமாக செய்து வருகிறார்களாம். எப்படியும் போடியில் திமுகவை வெற்றிபெற வைக்க முயற்சி நடக்கின்றதாம்.
 
இந்த தகவல் அறிந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் கொதிப்பில் உள்ளார்களாம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சர் தகவல்..!

சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றமா? என்ன காரணம்?

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு செம மழை! - வானிலை அலெர்ட்!

ஸ்டாலின் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு வராதது ஏன்? சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments