Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலையுடன் ஓய்கிறது பரபரப்பு பிரச்சாரம்! - மீறினால் நடவடிக்கை

Webdunia
சனி, 14 மே 2016 (10:23 IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மே 14 ஆம் தேதி மாலை 6மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
 

 
வழக்கமாக தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் கடைசி நாளில் மாலை 5 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இம்முறை மாலை 6மணி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
எனவே அரசியல் கட்சியினர் வரும் 14 ஆம்தேதி மாலை 6 மணி வரை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். மேலும் மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இடைவிடாது மாலை 6 மணி வரை நடைபெறும்.
 
இன்று மாலை 6மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக அல்லது கூட்டம், ஊர்வலம் நடத்தியதாக அல்லது வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் வகையில் ஏதாவது வெளியிட்டால் அவர்கள் மீது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126வது பிரிவின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எனவே, அரசியல் கட்சிகளும் அனைத்து வேட்பாளர்களும் இந்த விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நேரத்திற்குள் பிரச்சாரத்தையும் மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்வதையும் முடித்துக்கொள்ளுமாறு ராஜேஷ்லக்கானி அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments