2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, மார்ஸிட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற அணி, பார்வாடு பிளாக், இந்திய குடியரசுக் கட்சி, மற்றும் கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய 11 கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட்டு 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வென்றது. 12 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்ஸிட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
புதிய தமிழகம் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளைக் கைப்பற்றியது.
2 தொகுதிகளில் பேட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி, போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வென்றது.
மூவேந்தர் முன்னேற்ற முன்னணி 1 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் அதில் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.
ஒரு இடத்தில் போட்டியிட்ட பார்வார்டு ப்ளாக் கட்சி போட்டியிட்ட அந்த தொகுதியில் வெற்றி பெற்றது.
இந்திய குடியரசுக் கட்சி ஒரு இடத்தில் போட்டியிட்டு தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றது.
இதே போல ஓரு இடத்தில் போட்டியிட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றது.
அதன்படி அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்த கட்சிகள் போடியிட்ட 234 தொகுதிகளில் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
ஆனால் 2016 சட்டமன்ற தேல்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை வெறியேறியுள்ளன.
இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் அதிமுகவின் தனது வெற்றியை தக்கவைக்கும் நோக்கில் தனது தேர்ல் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பின்னர்தான் இந்த கூட்டணி வெற்றி பெறுகிறதா, அல்லது தோல்வியடைகிறதா என்பது தெரியவரும்.