சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினியை காதலித்து கரம் பிடித்தது எப்படி என அவரது காதல் கணவர் யோகேஷ் மனம் திறந்துள்ளார்.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மைனா என்ற கிராமத்து வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்த பின் தனக்கென தனியாக ரசிகர்களை உருவாக்கி கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திய நந்தினி தற்போது சக நடிகரரான யோகேஷை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
தங்கள் காதல் கைகூடியது எப்படி என நந்தினியின் கணவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் ‘நந்தினியைப் பார்த்து பழகியதும் அவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவரிடம் அதை சொல்ல முடியாமல் தவித்தேன், பின்னர் எனது பெற்றோரிடம் சொல்லி அவருடைய பெற்றோரிடம் பேச சொன்னேன். பின்னர் இரு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.