Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் டிவியின் நியுஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டது ஏன் ? ஹெச் ராஜா கருத்து!

விஜய் டிவியின் நியுஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டது ஏன் ? ஹெச் ராஜா கருத்து!
, திங்கள், 20 ஏப்ரல் 2020 (17:45 IST)
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சேனாலாக் இருக்கும் விஜய் டிவியின் நியுஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டது ஏன் என ஹெச் ராஜா பதிலளித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் நபரால் பார்க்கப்படும் சேனல்களில் ஒன்றாக இருக்கும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதன் தொடக்க காலத்தில் செய்திகளையும் அளித்த வந்த நிர்வாகம் திடீரென ஒருநாள் அதை நிறுத்தியது, அதன் பின்னால் அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக இருந்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவரது டிவீட்டில் ‘2004ல் ஸ்டார் விஜயில் வாரிசு அரசியல் குறித்து விவாதம். கோபிநாத் டாக்டர் மகன் டாக்டர் ஆவது தவறா என்றார்.நான் டாக்டருக்கு படித்தால் ஆகலாம். ஆனால் தயாநிதிமாறன் தகப்பனார் இறந்ததால் அதே தொகுதியில் எம்பி.உடனே கேபினட் அமைச்சர் என்பது வாரிசு அரசியல்.என்றேன்.24 மணியில் நியூஸ் உரிமம் ரத்து’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்: டாக்டர் உயிரிழப்பு விவகாரம் குறித்து நடிகர் விவேக்