தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் பல்வேறு படங்களில் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். இவர் தமிழ் மட்டும் அல்லால் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் கூட நடித்திருக்கிறார்.
தற்போது 80 வயதாகும் இவர் தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்துள்ளார், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நாட்டாமை ரோலில் நடித்து இன்றும் ரசிகர்களால் பேசப்படும்.
கடைசியாக விஜய்குமார் லெஜெண்ட், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவர் சீரியலில் களமிறங்கியுள்ளார். ஆம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். அந்த சீரியலில் ஜமீன் ரோலில் அவர் என்ட்ரி ஆகி இருக்கும் ப்ரொமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.