Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளங்களை கொள்ளைக் கொண்ட ஓவியா - வைரல் வீடியோ

Advertiesment
Bigg boss
, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:52 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைக்கொண்ட நடிகை ஓவியா பற்றி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், வெளிப்படையாகவும், மனதில் பட்டதை பேசிக்கொண்டும், எப்போதும் சிரித்தபடி வலம் வந்த அவரை பலருக்கும் பிடித்துப்போனது.
 
தற்போது ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். இது, அவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், பிக்பஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருந்த போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு அழகான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சியும் தனது அதிகாரப்பூர்வமான சமூகவலைத்தள பக்கங்களில் “ ஓவியமாய் வந்து உள்ளங்களை கொள்ளைக் கொண்ட ஓவியா” என்ற தலைப்புடன் பதிவு செய்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுபடியும் காமெடி அவதாரம்… நண்பர்களுக்கு தூதுவிட்ட சாண்டல்