Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களோடு இனிமேல் பேச விரும்பவில்லை ; கோபமடைந்த கமல்ஹாசன் - பிக்பாஸ் பரபர

Advertiesment
Kamal haasan
, சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்கள் நடந்து கொள்ளும் விதத்தினை கண்டு, நடிகர் கமல்ஹாசன் கோபமடைந்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் உள்ள ரைசா, காயத்ரி உள்ளிட்ட சிலர் சில காரணங்களுக்காக கோபம் அடைந்து பிக்பாஸ் விதிமுறைகளை மீறி நடந்து வந்தனர். தூக்கம் தொடர்பாக ரைசா பிக்பாஸிடம் சண்டை போட்டார்.
 
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி இன்று புரோமோ வீடியோ வெளியிட்டுள்ளது. இன்றும், நாளையும் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் உரையாடுகிறார். அதில் ஒரு காட்சியைத்தான் ஒளிபரப்பியுள்ளார்கள்.
 
அதில் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் கோபமாக பேசும் கமல்ஹாசன் “பிக்பாஸை அவமரியாதை செய்வது போல் ஏன் பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பள்ளிக் குழந்தைகளா? மைக்கைப் பொத்திக் கொண்டு பேசினால் யாருக்கும் கேட்காது என நினைக்கிறீர்களா? என்ன சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு. நான் எவ்வளவோ கூறிவிட்டேன். ஆனால் அதில் எதுவும் பலிக்கவில்லை. எனவே, உங்களிடம் இனிமேல் நான் பேச விரும்பவில்லை” எனக் கூறி நிகழ்ச்சியை கட் செய்ய சொல்கிறார். 
 
இதனால் பதட்டம் அடைந்த வையாபுரி மற்றும் சினேகன் ஆகியோர் அவரை சமாதானம் செய்ய முயல்வது போல் அந்த வீடியோ முடிவடைகிறது. கமல்ஹாசன் கோபமடைந்திருப்பதால் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல், இதைக் கண்ட பலரும் ‘நல்லா கேளுங்க சார்’ என்கிற ரேஞ்சில் கமல்ஹாசனை பாராட்டி வருகிறார்கள். முக்கியமாக காயத்ரிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழையன கழிந்தே தீர வேண்டும் புதியன புகுந்தே ஆக வேண்டும்; பிக்பாஸ் ப்ரொமோ!