பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி தெரியுமா?

Webdunia
திங்கள், 7 மே 2018 (11:09 IST)
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேதி குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.

 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா மூன்று படங்கள் நடித்துவருகிறார். அதேபோல் ரைசா, ஹரிஷ் ஆகியோர் இணைந்து ஒரு படத்திலும், ஜூலி இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இவற்றில் அனிதாவின் வாழ்க்கை வரலாற்று  திரைப்படமும் ஒன்று.
 
விரைவில் பிக்பாஸ் 2, ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் ஜூன் முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பிரபல நடிகர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது என முன்பே செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், வருகிற ஜூன் 17ம் தேதி முதல் பிக்பாஸ் 2 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என செய்தி வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு பின் பிக்பாஸ் 2 தொடங்குவதால், இது மக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments