Publish Date: Tue, 30 Mar 2021 (12:46 IST)
Updated Date: Tue, 30 Mar 2021 (12:54 IST)
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் அதிமுக அமைச்சர் கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் வாக்கு இல்லை என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனராம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அயன்வலசு கிராமத்தில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் சுற்றியுள்ள 52 கிராமங்களில் இருந்து எதிர்ப்பு உருவானது. இதனால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று மக்கள் கூறினர்.
இந்நிலையில் இப்போது அந்த கிராம மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் கே சி கருப்பண்ணனுக்கு எங்கள் வாக்கு இல்லை என தொகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்துவதாக சொல்லப்படுகிறது.