Publish Date: Wed, 24 Mar 2021 (12:09 IST)
Updated Date: Wed, 24 Mar 2021 (15:18 IST)
மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்காக வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் நடனமாடி வாக்கு கேட்கும் முதியவர் .
மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் தற்போதைய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழ்நிலையில் மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் அமைச்சர் செல்லூர் ராஜு.
அப்போது முன்னால் சென்ற நடன குழுவினருடன் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்த முதியவர் ஒருவர் நடனமாடி மக்களை சந்தோஷப்படுத்தி அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.